மேற்குவங்க மாநிலத்தில் சுந்தரவன புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலி ஒன்று வனத்துறை ஊழியரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வனப்பகுதியை விட்டு ஒரு புலி வெளியே வந்துவிட்டது. இந்த புலியை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் செல்வதற்காக வனத்துறையினர் விரட்டியுள்ளனர்.

இதனால் புலி மிகவும் கோபமடைந்து ஒரு ஊழியரை தாக்கியது. உடனே அங்கிருந்த மற்ற ஊழியர்கள் சூழ்ந்து கொண்டு கம்பால் அந்த புலியை விரட்டினர். இதனால் பயந்து போன புலி காட்டிற்குள் மீண்டும் சென்று விட்டது. தற்போது காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.