
தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கணக்கெடுப்பு நடத்தக் கோரி இம்மாதத்திற்குள் சென்னையில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம். பின் தங்கிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.