
அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி விவாதிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீக்க கோரிய மனுக்கள் மீது 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கில் கட்சியில் எந்த பிளவும் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் பக்கம் இருப்பதாக ரவீந்திரநாத் கூறியிருந்தார். இந்த வழக்கில் பன்னிரண்டாம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பு யாருக்கு சாதகமாகும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.