கேரள மாநிலம் பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா. கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் அனிதாவின் பெற்றோர் வெளிநாட்டில் பணிபுரிவதால் இவர் விடுதியில் தங்கியிருந்தார். வார விடுமுறையை ஒட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்த அனிதா ஞாயிற்றுக்கிழமை விடுதிக்கு திரும்பியிருந்தார். ஆனால் அவரது அறையில் உடன் தங்கியிருந்த சக மாணவிகள் ஊரிலிருந்து திரும்பவில்லை.

இனிமேல் அறையில் தனியாக இருந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு காவல்துறையினர் ஒரு தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் பெற்றோரிடம் தன்னை மன்னித்து விடும்படி குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனிதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.