நாடே எதிர்பார்க்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் டெல்லியையும், தேர்தலை சந்திக்க உள்ள பீகாரையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு கூறியுள்ளார்.