தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். மீண்டும் ஏழாவது முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் கூறி வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதனால் எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் வாரிசு ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக கடுமையாக விமர்சிக்கிறது. அதாவது கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று தற்போது முதல்வராகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக மாறியுள்ளதால் அடுத்து வரும் தேர்தலில் அவரை களம் காண திமுக வேலைகளை செய்து வருவதாக எதிர்கட்சிகள் விமர்சிக்கிறது. குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் நடந்து வருவதாக கடுமையாக விளாசி வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொடுத்த பழைய பேட்டிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நடிகை சங்கீதா உதயநிதி ஸ்டாலினை பேட்டி எடுக்கும்போது அரசியலில் உங்களை பார்க்கலாமா என்று கேட்கிறார். அதற்கு உதயநிதி ஸ்டாலின் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற அவசியம் கிடையாது. கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்கள் தான் பொறுப்புக்கு வரவேண்டும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறுகிறார். இதேபோன்று மு.க ஸ்டாலினிடம் உங்கள் குடும்பத்தில் இருந்து யாராவது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டபோது அதற்கு அவர் இனி என்னுடைய மகனாக இருந்தாலும் சரி மருமகனாக இருந்தாலும் சரி கண்டிப்பாக என்னுடைய குடும்ப த்தில் இருந்து அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறுகிறார்.

அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக மாறிய நிலையில் அடுத்தது அமைச்சர் தானே என்று பேட்டியில் கேட்டபோது கண்டிப்பாக நான் அமைச்சர் ஆக மாறமாட்டேன். கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு தான் பதவி கொடுக்கப்பட வேண்டும். எனக்கு தலைவர் அந்த பதவி எல்லாம் தரமாட்டார் என்று கூறுகிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Music (@tamil_._music)