கிரிக்கெட் என்றாலே மற்ற அணிகளின் விளையாட்டை விட இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் ஆர்வமாக பார்ப்பார்கள். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டியை சுவாரஸ்யமாக பார்ப்பார்கள்.

இந்நிலையில் netflix நிறுவனம் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி ஒரு ஆவண படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் காட்சிப்படுத்தப்படுவதோடு இரண்டு அணிகளில் விளையாடிய முன்னாள் வீரர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த ஆவணப்படத்திற்கு “தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி இந்தியா பாகிஸ்தான்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லரை netflix தற்போது வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் வீடியோவை காண