
நாடு முழுவதும் மத்திய அரசு மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் கோவா சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கிய பங்கு வகித்த லிபியா லோபா சர்தேசாய் என்ற பெண்மணிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. இவர் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர்.
இவர் போர்த்துக்கீசிய ஆட்சியில் இருந்து கோவாவின் விடுதலைக்காக பிரச்சாரம் செய்தார். கடந்த 1955 ஆம் ஆண்டு voz da Liberdade என்ற சீக்ரெட் வானொலி நிலையத்தை தொடங்கி பொதுமக்களை போராட்டத்திற்காக திரட்டியவர். மேலும் இவரை கௌரவப்படுத்தும் விதமாக தற்போது மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.