
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி கூறியதாவது, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக உறுப்பினர்கள் அனைவரும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். வரும் ஈரோடு இடைத்தேர்தல் அதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவுடன் போட்டியிட்டால் டெபாசிட் இழந்து விடுவோம் என்ற பயத்தினால் தான் அதிமுக மற்றும் பாஜக அணியினர் போட்டியிடவில்லை.
தொடர்ந்து அம்மாவாசை கனவு கண்டு கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிஜேபி போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என பின்வாங்கியுள்ளனர். அன்றைக்கு இருந்தவர்கள் எல்லாம் கொள்கை பிடிப்போடு கழகப் பணியாற்றி கட்சியை கொண்டு சென்றவர்கள். ஆனால் இன்று முதலமைச்சர் ஆகிவிடுவோம் என்ற கனவில் அனைவரும் புதிய கட்சியை தொடங்கி வருகின்றனர்.
இதற்கெல்லாம் கவலைப்படாமல் கழகத்தில் இணைந்து திமுக ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி அடைவோம். பலரும் கட்சியை குறித்து அவதூறாக பேசி வருகிறார்கள். அவற்றையெல்லாம் கடந்து திமுக ஆட்சி தேர்தல் அறிக்கையில் கொடுத்த 80% வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.