பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் 8 சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் வெற்றிக்காக போராடி வந்த நிலையில் தற்போது ஏற்கனவே எவிட் செய்யப்பட்டு வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் இன்று வீட்டிற்குள் வந்துள்ளனர்.

அவர்களில் ஒருவராக தயாரிப்பாளர் ரவீந்தரும் வந்துள்ளார். வீட்டினுள் வந்ததுமே அவர் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளில் இறங்க துவங்கியுள்ளார். அதன்படி வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள் தான் யார் பணப்பெட்டியை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று அவர்களுக்குள்ளாகவே திட்டம் போட்டு செயல்பட வேண்டும் என்று பேசுகிறார்.

அதோடு ராயனிடம் அதனை செயல்படுத்தவும் முயற்சிக்கிறார். இந்த சூழலில் பிக் பாஸ் ரவீந்தரை Confession ரூமுக்கு அழைத்து பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளை மீறி Voting மற்றும் மக்களின் கருத்துக்களை பற்றி பேசி இருக்கிறீர்கள் என்று கண்டித்துள்ளார். இதனால் ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா என்பது தெரியாத நிலையில் ரவீந்தர் கண் கலங்கிய காட்சி இன்றைய நாளின் இரண்டாவது பிரமோவாக வெளியாகி உள்ளது.

https://youtu.be/pAVEEeZ-Oic