ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து  பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதால் அந்த தொகுதியில் அவருடைய தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் சமீபத்தில் இவரும் உடல்நலக் குறைவினால் இறந்துவிட்டார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்த தேர்தலில் ‌ காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்பது தெரியவில்லை. விரைவில் அதிகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அதன் பிறகு நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. முன்னதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடவில்லை. அதாவது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தான் தமிழக வெற்றி கழகம் களம் காணும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஜனவரி 11ஆம் தேதி அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் முன்னதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடவில்லை. மேலும் இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.