
குஜராத் மாநிலத்தில் கண்டரேய் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு 18 வயது இளம் பெண் நேற்று காலை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டார். அந்த ஆழ்துளை கிணறு 540 அடி ஆழத்தில் இருந்த நிலையில் அந்த இளம்பெண் 490 அடி பள்ளத்தில் சிக்கிவிட்டதாக கூறினர். அந்த இளம் பெண் மயக்கத்தில் இருந்ததால் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 33 மணி நேரமாக அந்த இளம் பெண்ணை மீட்க போராடிய நிலையில் அவர் இறந்துவிட்டார். அதாவது அந்த பெண்ணை ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்ட நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.