
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அனிருத் இசை அமைக்க திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பொங்கல் பண்டிகையில் படம் வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்தது. ஆனால் பின்னர் பொங்கல் பண்டிகைக்கு படம் ரிலீஸ் ஆகாது என்று தெரிவித்தது.

இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. அதாவது அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை மார்கண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படம் தற்போது ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளது. மேலும் இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குட் பேட் அக்லி என்ற ஹேஷ்டேக்கை எக்சில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.