
தமிழகத்தில் புதிதாக 13 நகராட்சிகள் 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை சற்று முன் வெளியானது. அந்த வகையில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறது. இதனையடுத்து திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி இணைக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது. ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உட்பட 25 பேரூராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. 29 கிராம ஊராட்சிகள் 25 பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள் பேரூராட்சிகள் அமைத்து உருவாக்கம் குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் 6 வாரங்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.