விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் லியா லட்சுமி என்ற 4 வயது சிறுமி இன்று செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டு தெரிவித்துள்ளனர். அதாவது காலை நேரத்தில் குழந்தை கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறிய நிலையில் மாலை நேரத்தில் போது தான் குழந்தையை அவர்கள் காணவில்லை என்று தேடியுள்ளனர். ஒரு குழந்தை ஏறி நிற்கும் அளவிற்கு செப்டிக் டேங்க் மூடியை அலட்சியமாக வைத்துள்ளனர் என்று தனியார் பள்ளியின் மீது பல குற்றச்சாட்டுகளை உறவினர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தற்போது காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் குழந்தையின் உடலை வாங்கிய போது அவருடைய தந்தை தன் மகளின் உடம்பை மடியில் வைத்து கதறி அழுகிறார். அப்பா கூட வீட்டுக்கு வந்துருமா என்று கூறி அந்த தந்தை கதறியழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.