பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக சார்பில் மதுரையில் மகளிர் அணி நீதி பேரணி நடத்தும் நிலையில் சென்னையில் முடிவடையும். கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகம் அமைதியான பூங்கா என்றும் முதல்வர் கூறுகிறார். 2023 ஆம் ஆண்டு அறிக்கை விரைவில் வரவிருக்கும் நிலையில் ‌ இந்தியாவில் எங்கும் இல்லாத அநியாயம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இரண்டரை வருடங்களாக குழந்தைகளுக்கான ஆணையம் செயல்படாமல் இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பஞ்சப்பாட்டு பாடி வருகிறது. ஆனால் திமுகவில் மாவட்ட செயலாளர்கள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் தனியார் பள்ளிகளை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்தது. திமுக அரசு ஒவ்வொரு வருடமும் புதிதாக எதையும் செய்யாத நிலையில் ஒரு கோடி கடன் மட்டும் வாங்குகிறது. மேலும் திமுகவுக்கு தைரியம் கிடையாது. உதயநிதி ஸ்டாலின் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் மாசுப்பிரமணியன் ஞானசேகரன் உடனான உறவு பற்றி விளக்கம் கொடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக இருந்தபோது உதயநிதி என்ன செய்தார். இப்போது உள்ள பரந்தாமன் எம்எல்ஏ என்ன செய்து கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.