அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்டார். அதில் அண்ணனாகவும், அரணாகவும் நான் உறுதுணையாக நிற்பேன் என கூறியிருந்தார். அதன் பிறகு விஜய் ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பெஞ்சல் புயலுக்கான நிவாரணத்தொகை முழுமையாக கிடைக்கவில்லை என பல கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் கவர்னரை சந்திக்க சென்ற விஜயுடன் அலுவலர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல் புன்னகையோடு விஜய் கைக்குலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.