தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டில் 10,701 பேருக்கு அரசு பணி வழங்கி உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஆண்டிற்கு 10 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கினால் இளைஞர்களின் கனவு எப்படி நனவாகும்? வேலை வாய்ப்பு கோரி 60 லட்சம் பேர்
காத்திருக்கும் நிலையில், அதிக காலி பணியிடங்களை வைத்திருப்பது அரசின் அலட்சியமே காரணம். காலியாக உள்ள 6.25 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு போர்க்கால
அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
