
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கஞ்ச்பெத் பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அந்த பள்ளியில் 17 வயது சிறுவன் பத்தாம் வகுப்பு படிக்கிறார். அந்த சிறுவன் மீது இளம்பெண்ணுக்கு ஆசை வந்தது. ஒரு கட்டத்தில் சிறுவனுடன் நெருக்கமாக பழகி அத்துமீறலில் ஈடுபட்டு பள்ளி வளாகத்திலேயே இளம்பெண் மாணவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்து சோகமாக இருந்த சிறுவனிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது தனக்கு நடந்ததை கூறி சிறுவன் அழுதுள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.