பாகிஸ்தான் நாட்டின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டி பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும் 22 பேர் காயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பேருந்து அதிக வேகத்தில் சென்றது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.