
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சூரியலிங்கம் சன்னதி எதிரில் டிவைன் ஃபார்ம் ஹவுஸ் என்னும் பெயரில் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீடு தங்கும் விடுதி உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த ருக்மணி பிரியா(45) என்பவர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார்.
ருக்மணிக்கு ஜலந்தரி(18) என்ற மகளும் முக்குந்த் ஆகாஷ் குமார்(13) என்ற மகனும் இருந்துள்ளனர். இவர்களுடன் சிவகங்கையை சேர்ந்த ஸ்ரீ மகாகால வியாசர்(40) என்பவரும் தங்கி இருந்தார். இந்த நிலையில் பண்ணை விட்டு விடுதியில் நான்கு பெரும் வாயில் நுரை தள்ளுபடி இறந்து கிடந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நான்கு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முன்னதாக 10 பக்க கடிதம் 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் கூறும் போது, தற்கொலை செய்து கொண்டதை செல்போன் வீடியோவில் கடைசி நிமிடத்தில் பதிவு செய்துள்ளனர். அதில் அவர்கள் நாங்கள் வந்த வேலை முடிந்து விட்டது. இறைவனின் விருப்பப்படி மகாலட்சுமியின் திருவடி சொல்கிறோம் என கூறியுள்ளனர்.
மேலும் 10 பக்க கடிதத்தில் தற்கொலை செய்து கொள்ள விரும்பி அந்த முடிவை எடுத்ததாக எழுதியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ருக்மணி பிரியா கணவரை பிரிந்தார். அதன் பிறகு அவர் ஸ்ரீ மகாகால வியாசர் உடன் சேர்ந்து வாழ்ந்தது தெரியவந்தது. அவர்கள் கடந்த சில மாதங்களாக பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலைக்கு வந்து சென்றுள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.