
தேமுதிக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஒருவருடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக காவல்துறையினரிடம் அமைதி பேரணி நடத்த தேமுதிகவினர் அனுமதி கேட்ட நிலையில் அவர்கள் மறுத்ததால் இன்று தடையை மீறி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் அனுமதி பேரணி நடத்தினர்.
இதனால் கோயம்பேடு பகுதியே ஸ்தம்பித்தது. முதலில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் பின்னர் அப்படியே பேரணியாக சென்றுவிட்டனர். கேப்டன் வாழ்க அரசு ஒழிக என்று கோஷமிட்டனர். பிரேமலதா கேப்டன் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது சிலையை கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தார். மேலும் அவர் கண்ணீர் மல்க உருக்கமாக அஞ்சலி செலுத்தியது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.