
திரிபுரா மாநிலத்தில் இருக்கும் தைத்யேஸ்வரி காளி கோவிலில் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பணம் திருடு போயுள்ளது. கோவிலின் கதவு உடைந்து இருப்பதை பார்த்த பூசாரி அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் திருடு போன தங்கத்தின் எடை 291 கிராம் என்றும் வெள்ளியின் எடை 466 கிராம் என்றும் பணம் மொத்தம் 30 ஆயிரம் என்றும் கூறப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற போலீசார் சிசிடிவி கட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.