
இந்தியா, ஆஸ்திரேலியா அணியின் பார்டர்-கவாஸ்கர் தொடரின் 4வது போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்ற நிலையில், இந்த அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இதில் கான்ஸ்டாஸ் 60 ரன்கள் எடுத்ததோடு, இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சிதறடித்தது. இதற்கிடையில் கான்ஸ்டாஸ்க்கும், கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதாவது மைதானத்தில் கான்ஸ்டாஸ் நடந்து சென்ற போது, கோலி அவரை வேண்டும் என்றே தோள்பட்டையில் இடித்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை உடனே கவாஜா அங்கிருந்து இருவரையும் சமாதானப்படுத்தினார், இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
விராட் கோலிவுடைய போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நாளிதழின் கடைசி பக்கத்தில் கோலியை விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘Clown Kohli’ என ஆஸ்திரேலிய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘Sook’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாலில் Sook என்பதன் பொருள் கோழை அல்லது அழும் குழந்தை என்பதாகும். பல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கோலியை ஐசிசி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து கான்ஸ்டாஸ் கூறியதாவது, நான் எனது கையுறைகளை சரி செய்து கொண்டிருந்தேன். அப்போது தற்செயலாக என்னை அவர் மோதி விட்டார் என்று நினைக்கிறேன் என தெரிவித்திருந்தார்.