
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெத்தானியாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரை முன் விரோதம் காரணமாக கத்தியால் குத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த ஆறுமுகத்தின் சகோதரர்களான வேல்முருகன், சக்திவேல் உட்பட 3 பேர் முருகனை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் முருகன் மீது கல்லை போட்டு கொலை செய்ய முயற்சி செய்தனர். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
உடல் முழுக்க காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முருகன் கிடந்தார். இதற்கிடையே அந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்ககு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.