வங்க கடலில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுச்சேரியிலும் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற 25-ம் தேதி தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் அன்றைய தினம் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.