TUI-க்கு சொந்தமான விமானம் ஒன்று இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்துள்ளது. விமான பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக ஏணிகள் வைக்கப்படும். அதன் பின்னர் விமானம் புறப்படும் போது கதவு அடைக்கப்பட்டு, அந்த ஏணிப்படிகள் அகற்றப்படும். அந்த வகையில் ஏணிப்படிகள் பொருத்தப்பட்டு விமானத்திற்குள் பயணிகள் ஏறினர். அதன் பின் விமானம் புறப்படுவது தயாராக இருந்தது.

அப்போது பணிப்பெண் ஒருவர் கதவை திறந்து கீழே இறங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கீழே படிக்கட்டு விமானத்துடன் இணைக்காமல் தனியாக இருந்துள்ளது. இதனால் அந்தப் பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து முதலுதவி கொடுக்கப்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பணிப்பெண் கீழே விழுந்தது எப்படி என்று விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.