ஸ்ரேயாஸ் ஐயர்  ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார். அவரை 26 கோடியை 75 லட்ச ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது. கடந்த ஐபிஎல் தொடரை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் இந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

சமீபத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது, சையத் முஷ்டாக் அலி தொடரை வென்ற பிறகு ஒரு உணர்வு எனக்குள் உள்ளது. அந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு அணியாக நாங்கள் உழைப்பை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த தொடரில் அனைத்து சிறப்பாக விளையாடி உள்ளனர். ஒரே ஆண்டில் நான்கு கோப்பைகளை வென்றதால் இந்த ஆண்டு எனக்கு சிறந்ததாக அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கோப்பையை வெல்வது எனக்கு முக்கியமான குறிக்கோள் என கூறியுள்ளார்.