
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிய நிலையில், இது வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அது வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது சென்னைக்கு 370 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேலும் இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.