உலக அளவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தான் அதிக அளவு போலியோ நோய்கள் பரவி வருகிறது. இதனை தடுக்க அவ்வப்போது சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பாக செல்லும் போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றுள்ளது. முகாம் முடிந்து மருத்துவ ஊழியர்களும் காவல்துறையினரும் வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கரக் பகுதியில் வந்த வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் கன்னிவெடி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் மூன்று போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.