
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது இணையதள பக்கத்தில் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விளக்கம் கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, தமிழக பாடநூல் கழக நிறுவனத்துடன் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ஜாபர் சாதிக் ஒப்பந்தம் செய்துள்ளார் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிவித்துள்ளது. ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் எனத் தெரிந்தும் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் ஜாபர் சாதிக் போதைப் பொருளால் கிடைத்த பணத்தை தனது நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும் அமலாக்கத்துறை தெளிவுபடுத்தி உள்ளது. அதே ஆண்டில்தான் தமிழ்நாடு பாடநூல் கழக நிறுவனத்துடன், ஜாபர் சாதிக்கின் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பொருட்களை ஜாபர் சாதிக் நிறுவனம் தான் வழங்கியது. போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே தமிழ்நாடு பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார் ஜாபர் சாதிக்.
இதற்கு ஆளும் கட்சியான திமுக அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இந்த ஒப்பந்தம் குறித்த விளக்கத்தை தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு தனது பதிவில் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.