திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த முறை திருவண்ணாமலை மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே திருவண்ணாமலை மலை மீது தீபம் ஏற்றுவதற்காக சென்றனர்.

இந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த அன்னபூர்ணா என்பவர் கார்த்திகை தீபத்திருநாள் அன்று மலை மீது ஏறியுள்ளார். அவருக்கு திரும்பி வருவதற்கான வழி தெரியவில்லை. இதனால் 2  நாட்களாக தீப மலை மீது என்ன செய்வது என்று அறியாமல் தவித்தார். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அன்னபூர்ணாவை கண்டுபிடித்தனர். வனக்காப்பாளர் அவரை பாதுகாப்பாக முதுகில் சுமந்து கீழே கொண்டு வந்தார். இதனை அறிந்த பொதுமக்கள் வனத்துறையினரை பாராட்டியுள்ளனர்.