பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எருதுபட்டியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்று வயது குழந்தை கடந்த 13-ஆம் தேதி கொலுசு திருகை விழுங்கி விட்டது. உடனே பெற்றோர் குழந்தையை இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது பிறகு குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கி இருந்தது தெரியவந்தது.

உடனே மேல் சிகிச்சைக்காக குழந்தையை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் நவீன சிகிச்சை மூலம் அந்த திருக்கை வெற்றிகரமாக அகற்றி விட்டனர். தற்போது குழந்தை நலமாக இருக்கிறது.