திருப்பூர் மாவட்டத்தில் சரண்யா ரமேஷ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சரண்யா திருப்பூர் 60 அடி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனது நண்பருடன் வந்த ரமேஷ் சரண்யாவை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரண்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரண்யாவின் கணவர் ரமேஷ் தனது மனைவியை அரிவாளால் வெட்டியதாக கூறி, காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.