ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள மைதானத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது. இது 10ஆவது ஆசிய கோப்பை போட்டியாகும். இதில் இடம்பெற்றுள்ள 10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இதில் “ஏ” பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 3ஆவது ஆட்டத்தில் சீனதைபேவை அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி தொடங்கியதுமே சிறப்பாக ஆடியது. இந்தியா இந்திய அணி 16-0 என்ற கோல் கணக்கில் சீனவைபேவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் அசத்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து தென் கொரிய அணியுடன் விளையாட உள்ளது. இதேபோன்று ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி அணி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது மற்றும் ஹாக்கி ஆடவர் பிரிவு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து ஹாக்கி அணியினர் இந்தியாவிற்கு அடுத்தடுத்த வெற்றியைப் பெற்று தந்து பெருமைப்படுத்தியுள்ளனர்.