
நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக மாவட்ட செயலாளர்கள் முதல் நிர்வாகிகள் என பலரும் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். அப்படி விலகும் கட்சி நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு விலகி உள்ளனர். அதாவது நெல்லையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் நிர்வாகிகளை ஒருமையில் பேசியதாக குற்றம் சாட்டி நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் மற்றும் குருதிக்கொடை அமைப்பினர் என சுமார் 200 பேர் விலகியுள்ளனர்.
இந்த தகவலை அந்த கட்சியின் நிர்வாகிகள் பர்வீன் மற்றும் கண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு சீமான் சங்கி என்றால் நண்பன் என்று பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாம் தமிழர் கட்சி அடுத்த கட்டத்திற்கு செல்லாது எனவும் கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதையே கிடையாது என்றும் கூறியுள்ளனர். மேலும் நாங்கள் உழைக்கும் கட்சியில் சென்று இணைவோம் என்று அவர்கள் கூறினர்.