அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தற்போது திமுகவை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியதாவது, பொய்க்கால் நடனம் என்ற தமிழ் பாரம்பரிய நடனம் ஒன்று இருக்கிறது. அந்த நடனம் ஆடுபவர் மிகவும் உயரமாக இருக்கும் நிலையில் அவரைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.

ஆனால் அவருடைய உயரத்திற்கு கட்டைக்கால் தான் காரணம் என்பது பின்பு தான் தெரியும். அதேபோன்றுதான் திமுகவும் தன்னுடைய சொந்த காலில் நிற்கும் தகுதியை இழந்துவிட்டது. பொய்க்கால் நடனம் போன்ற திமுக கூட்டணி கட்சிகளின் தயவில் தான் ‌ தமிழ்நாட்டில் ஆட்சியை நிறுவியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் திமுகவுக்கு செல்வாக்கு இல்லை. கூட்டணி தயவில்தான் ஆட்சியில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.