
ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாகநடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவில் இந்திய கூட்டணி 56 இடங்களிலும், பாஜக கூட்டணி 24 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து கவர்னர் தலைமையில் தற்போது பதவிப்பிரமாணம் நடைபெற்றது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் மூன்றாவது முறையாக சோரன் ஆட்சி அமைத்தார். இந்த பதவி ஏற்பு விழா இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இதில் ஹேமந்த் சோரணை முதல் மந்திரி ஆக ஜார்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கேங்வார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் பதவியேற்பு விழாவிற்கு இந்திய கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு ஹேமந்த் சோரனை வாழ்த்தினார். மேலும் அவருக்கு கருணாநிதி குறித்த ஆங்கில புத்தகத்தையும் பரிசாக அளித்தார். இதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனன், ராகுல் காந்தி, மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.