நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைந்த விலையில் ரேஷன் உதவிகள் வழங்கப்படுகிறது. இந்திய அரசு மக்களுக்கு ரேஷன் கார்டுகளை கொடுக்கிறது. ரேஷன் கார்டு இல்லாமல் அந்த வசதியை மக்கள் பெற இயலாது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இது போக வேறு சில சலுகைகளும் கிடைக்கிறது.
இந்த நிலையில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு அரசு ஒரு பெரிய சலுகையை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் ரேஷன் கார்டு தாரர்களுக்கு 480 ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்கும் ராஜஸ்தான் அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 450 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் ரேஷன் கார்டுகளுக்கு குறைந்த விலையில் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு 450 ரூபாய்க்கு அரசு சிலிண்டர்களை வழங்குகிறது.
இதற்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எல்பிஜி ஐடியை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும். அதன் பின்னரே குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கும் வசதியை பெற முடியும். ராஜஸ்தானில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறுகிறது. இவர்களில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 450 ரூபாய்க்கு 37 லட்சம் குடும்பங்கள் சிலிண்டர்களை வாங்குகின்றனர். இப்போது மாநிலத்தில் மீதமுள்ள 68 லட்ச குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டுகளில் 450 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
