
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விசாலை என்ற பகுதியில் முதல் மாநாட்டினை நடத்தி முடித்தார். இந்த மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு நடிகர் விஜய் வாடகை பணத்தை சரியான முறையில் வழங்கியதோடு பூமி பூஜை நடைபெறும் தினத்தில் கூட அவர்களை அழைத்து டிபன் வழங்கியுள்ளார். அதன்பிறகு சமீபத்தில் நிலம் கொடுத்த அனைத்து விவசாயிகளையும் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்து விருந்து கொடுத்ததோடு அவர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து பரிசு பொருட்களை வழங்கிய கௌரவப்படுத்தினார்.
நடிகர் விஜயால் நெகிழ்ந்து போன விவசாயி ஒருவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் பேசும்போது இதுவரை எங்களை யாருமே மதித்தது கிடையாது. நாங்க ஓட்டு போட்ட எம்எல்ஏ கூட எங்களை மதிச்சு பேசியதில்லை. இதுவரை நிலம் கொடுத்திருக்கும், ஆனால் எந்த ஒரு கட்சியும் அதற்காக காசு கொடுத்தது கிடையாது. ஆனால் விஜய் காசு கொடுத்தது மட்டுமின்றி எங்களுக்கு மரியாதையும் கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக தமிழகத்தில் மாற்றம் தேவை. நாங்கள் கண்டிப்பாக விஜய்க்கு மட்டும்தான் ஓட்டு போடுவோம் என்று கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோவை விஜய் ரசிகர்கள் வளர்ப்பு அப்படி. அவருடைய பிறவி குணம் என்று மாறாது. மேலும் என்றைக்கும் விவசாயிகளின் தோழன் விஜய் என்று வைரலாக்கி வருகிறார்கள்.
வளர்ப்பு அப்படி அண்ணே 😍 பிறவி குணம் மாறாது எப்பவும் 🔥🔥🔥 #விவசாயிகளின்தோழன்விஜய் ❤️#தமிழகவெற்றிக்கழகம் @actorvijay @tvkvijayhq pic.twitter.com/DipuRkG9Sv
— Vijay Vignesh #TVK (@VigneshVic67385) November 24, 2024