ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை நடுத்தெருவில் இஸ்மத் இனூன்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இஸ்மத் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது இஸ்மத் பள்ளி வாகனத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
