
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா. இந்தப் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. மேலும் இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். பல எதிர்பார்ப்புகளோடு வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் குறித்த எதிர்மறையான கருத்துக்களை பலரும் தெரிவித்து வந்த நிலையில் நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையிலும் தாக்கி பேசி உள்ளனர். இந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் தந்தையாக வந்த பிரபல நடிகரான ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, நடிகர் சூர்யா தரமான கல்விக்காக மும்பை சென்றதாக கூறப்படுகிறது.
தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் தரமான கல்வி வேண்டும் என நினைக்கிறார். இங்குள்ள மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை கற்றால் உங்க கணவருக்கு கோபம் வந்துவிடும் என “மொழி திணிப்பு” எதிராக நடிகர் சூர்யா கருத்து தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். அதேபோன்று நாங்களும் செய்வோம், உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து பாருங்கள்? என கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு காரணம் தமிழக மாணவர்கள் இந்தி மொழி பயில்வதற்கு எதிராக சூர்யா குரல் கொடுத்தது தான் காரணம் என கூறுகின்றனர்.