தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் கட்சிக்கொடி மற்றும் கட்சியின் பாடல் போன்றவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார். நடிகர் விஜயின் முதல் மாநாடு கடந்த 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் வரை கலந்து கொண்டனர்.

நடிகர் விஜய் அதன் பிறகு செயற்குழு கூட்டத்தை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு இன்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுவதற்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் விருந்து கொடுத்தார். அதோடு தங்க மோதிரமும் அவர்களுக்கு பரிசாக கொடுத்தார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் தற்போது ஒரு குச்சி கம்பில் டவர் மீது ‌ கட்சிக் கொடியை ஏற்றியுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோவை அவர்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.