பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமான் கடந்த 1995-ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானிடமிருந்து பிரிவதாக சாய்ரா அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாய்ரா பானு ஏ ஆர் ரகுமான பிரிவதாக வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். சுமார் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததால் ஏ.ஆர் ரகுமானின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஏ ஆர் ரகுமானின் மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். ஏ ஆர் ரகுமானின் மகள் சாய்ரா பானு சமூகவலைதள பக்கத்தில் ரஹ்மான் வெளியிட்ட விவாகரத்து போஸ்ட்டை ரீ ஷேர் செய்து வணக்கம் எமோஜியை பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் கமெண்டில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.