கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள புவனேஸ்வரி அம்மன் சிலை உடைக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் சிலையை உடைத்தது தெரிய வந்தது.

பின்னர் சம்பந்தப்பட்ட மாணவன் வீட்டிற்கு இரு போலீசார் மஃப்டி உடையில் சென்றனர். அவர்கள் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததாகவும் அதற்கு காரணம் அந்த சாமி தான் என்றும் கூறினான். அதனால்தான் ஆத்திரத்தில் சாமி சிலையை உடைத்ததாக சிறுவன் கூறிய நிலையில் சிறுவனை சிறார் நீதி மையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.