
எந்த ஒரு செயலுக்கும் பாஸ்வேர்ட் மிகவும் அவசியம் நாம் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் எளிய பாஸ்வேர்டுகளை உபயோகப்படுத்துகிறோம் அவற்றை ஹேக்கர்கள் எளிதில் தெரிந்து கொள்கின்றனர். ஒரு நிறுவனம் சமீபத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட் பற்றி ஆராய்ந்து அதனை வெளியிட்டது. 2024 ஆம் ஆண்டுக்கான அந்த பட்டியலில் 44 நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டுகள் பட்டியலிடப்பட்டது.
இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட் 123456 என்பதாகும். அந்த பாஸ்வேர்டை உபயோகப்படுத்திய 30,18, 050 பயனர்களில் 76 ஆயிரத்து 981 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். உலகம் முழுதும் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட இரண்டாவது பாஸ்வோர்ட் 123456789 என்பதாகும். இது இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் நான்காவது பாஸ்வேர்டு என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.