தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை விஜய் தொடங்கிய நிலையில் 2026 தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜயின் முதல் மாநாடு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த அதிரடியாக ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல் பட்டியலை தயார் செய்யுமாறு விஜய் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் 2026 தேர்தலில் விஜய் போட்டியிட எதுவான தொகுதி கொடுத்த நிர்வாகிகளிடம் ஆய்வு செய்யுமாறு மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் படி மேலிடம் ஆய்வு செய்ததில் நாகப்பட்டினம் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் ரிப்போர்ட் கொடுத்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தூத்துக்குடி மற்றும் அரியலூர் ஆகிய தொகுதிகள் உள்ளது. மேலும் முன்னதாக விஜய் மதுரை தொகுதியில் போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் நிர்வாகிகள் போஸ்டர் அடித்து மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.