
இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. தற்போது இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விராட் கோலி குறித்து விமர்சனம் ஒன்றை முன் வைத்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலி விளையாடிய டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இது மிகவும் மோசமானதாகும் என கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் கூறியதாவது, நாங்கள் அனைவரும் குழுவாக செயல்பட்டு முன்னேறி வருவோம். மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மிகவும் திறமை மிக்க விளையாட்டு வீரர்கள். அவர்களைப் பற்றி நான் எப்பொழுதும் கவலைப்பட்டதே இல்லை.
எனக்கு அவர்களது விளையாட்டு திறமை நன்றாகவே தெரியும்.இருவருமே இந்திய அணிக்கு பலமுறை பெருமை சேர்த்துள்ளனர். இனிவரும் தொடர்களிலும் அடுத்தடுத்து சாதனை புரிவார்கள் என நான் நம்புகிறேன். இந்திய அணியை பற்றி பேசுவதற்கு ரிக்கி பாண்டிக்கு என்ன சம்பந்தம் உள்ளது? முதல்ல உங்க நாட்டு அணியை பற்றி கவலைப்படுங்க என்றார்.