செங்கல்பட்டில் திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசும் வாய்ப்பு பெற்ற அமைச்சர் தா.மோ அன்பரசன், புதிய கட்சிகள் வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் மட்டுமே செயல்படுவதைக் கிண்டலடித்தார். “வெறும் வாட்ஸ்ஆப் வழியே கட்சியை நடத்துகின்றனர்.
இவர்கள் கள அனுபவம் பற்றிய புரிதல் இல்லாமல் செயல்படுகிறார்கள்,” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு கட்சிக் கூட்டம் நடத்தப் பல லட்சங்கள் செலவாகிறது என்றாலும், சில இடங்களில் சேர்கள் காலியாக இருப்பதை அவர் வேதனையுடன் வெளிப்படுத்தினார்.
