
உ.பி. மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள மாதோபட்டி கிராமம் தற்போது இந்தியாவின் அதிசயமாக மாறியுள்ளது. இங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளைப் பிடித்த அதிகாரிகள் இருக்கின்றனர் என்பதால், இக்கிராமம் “ஐஏஎஸ்-ஐபிஎஸ் தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது.
இந்த சிறிய கிராமத்தில் உள்ள 75 குடும்பங்களில், 47 பேர் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உருவாக்கியுள்ள மாதோபட்டி கிராமத்தில் பயிற்சிமையங்களோ இல்லாமல், விண்ணப்பதாரர்கள் தங்களின் கடின உழைப்பால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
மாதோபட்டியின் நம்பிக்கையை மேலும் உயர்த்தும் வகையில், இக்கிராமத்தில் பெண்ணும் ஆணும் சீரான வளர்ச்சியை கண்டு, பலருக்கும் உத்வேகம் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாகியுள்ளதால், இக்கிராமத்தில் வாழும் இளைஞர்களுக்கு இதுவே மிகப்பெரிய ஊக்கம்.
ஐஏஎஸ் அதிகாரியாக ஆவதற்கு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறவேண்டியது முக்கியமாகும். ஆளுமை, ஒழுங்கு, நிர்வாக திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளும் வகையில், யுபிஎஸ்சி வழங்கும் பயிற்சிகள் மூலம் இவர்களின் ஆளுமையை மேலும் மேம்படுத்துவதற்கு உதவுகிறது.